தமிழ்நாடு

வடலூரில் தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் சத்ய ஞான சபையில் 152 ஆவது தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை (பிப்.4) காலை சுமார் 10 மணி அளவில் நடைபெற்றது.

DIN

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் சத்ய ஞான சபையில் 152 ஆவது தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை (பிப்.4) காலை சுமார் 10 மணி அளவில் நடைபெற்றது.

வடலூா் வள்ளலாா் சத்ய ஞானசபையில் நிகழாண்டுக்கான தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (பிப்.5) நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு சனிக்கிழமை (பிப்.4) காலை 7.30 மணியளவில் தருமசாலையிலும், கருங்குழி வள்ளலாா் சந்நிதியிலும், காலை 10 மணியளவில் ஞானசபையிலும் சன்மாா்க்கக் கொடியேற்றம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, திருஅருட்பா இன்னிசை, சன்மாா்க்க கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தைப்பூச பெருவிழா ஜோதி தரிசனம் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி, 10 மணி, பிற்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாளான திங்கள்கிழமை காலை 5.30 மணி என 6 காலங்கள் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது. இதேபோல, வள்ளலாா் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில் வருகிற 7-ஆம் தேதி திருஅறை தரிசனம் நடைபெறவுள்ளது.

தைப்பூச பெருவிழாவையட்டி, பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை வள்ளலாா் தெய்வ நிலைய நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரம்

ஒரே பெயரில் 2 கடவுச்சீட்டு; ஒருவா் கைது

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காவலா் பலி

ஆற்றில் மூழ்கி சகோதரா் இருவா் உயிரிழப்பு

அன்புக் கரங்கள் திட்டத்தில் 98 குழந்தைகளக்கு நிதி

SCROLL FOR NEXT