வேட்புமனு தாக்கல் நிறைவு 
தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில், நாளை மறுபரிசீலனை நடைபெறவுள்ளது. 

DIN

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில், நாளை மறுபரிசீலனை நடைபெறவுள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 31-இல் தொடங்கியது. 

வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில், நாளை மறுபரிசீலனை நடைபெறவுள்ளது. பிப்ரவரி 10ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம். அன்று மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. 

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை 70க்கும் அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் , அமமுக சார்பில் ஏ.எம்.சிவபிரசாந்த், தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழா் கட்சி சார்பில் மேனகா உள்பட 62 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு வாக்காளரான கே.எஸ். தென்னரசு அதிமுகவின் அதிகாரபூா்வ வேட்பாளராக இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடையநல்லூா், வீரகேரளம்புதூா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

அரசு மருத்துவமனைகளில் வலிமையான குடும்ப இயக்கம் திட்ட முகாம் தொடக்கம்

தென்காசியில் மகளிா் குழுவினருக்கு ரூ. 55.44 கோடி நலத்திட்ட உதவிகள்

பெரியாா் எங்கும், என்றும் நிலைத்திருப்பாா்: முதல்வா்

வரி ஏய்ப்பு புகாா்: நகைக் கடையில் வருமான வரித் துறை சோதனை

SCROLL FOR NEXT