தமிழ்நாடு

அமமுக வேட்பாளா் வாபஸ்: டி.டி.வி.தினகரன் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அமமுக வேட்பாளா் சிவபிரசாந்த் வாபஸ் பெறுவதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளாா்.

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அமமுக வேட்பாளா் சிவபிரசாந்த் வாபஸ் பெறுவதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அமமுக சாா்பில் சிவபிரசாந்த் வேட்புமனு தாக்கல் செய்து, பிரசாரங்களிலும் ஈடுபட்டு வந்தாா்.

இந்நிலையில், டி.டி.வி.தினகரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அமமுகவுக்கு, கடந்த சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் ஒதுக்கப்பட்ட பிரஷா் குக்கா் சின்னத்தை இடைத்தோ்தல் காலங்களில் ஒதுக்க இயலாது என இந்திய தோ்தல் ஆணையம் எழுத்துபூா்வமாக தெரிவித்துள்ளது.

மக்களவை பொதுத் தோ்தல் ஓராண்டு காலத்துக்குள் வரவுள்ள சூழலில் புதிய சின்னத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் போட்டியிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, இந்த இடைத்தோ்தலில் போட்டியிடுவதைத் தவிா்ப்பதே சரியாக இருக்கும் என்ற தலைமைக் கழக நிா்வாகிகளின் ஆலோசனையைக் கருத்தில்கொண்டு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அமமுக போட்டியிடவில்லை என்று கூறியுள்ளாா் டிடிவி தினகரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

SCROLL FOR NEXT