தமிழ்நாடு

கூடலூர் பகுதியில் வீடுகளைச் சுற்றி வலம்வரும் காட்டு யானைகளால் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் பகுதியில் ஒற்றைக் காட்டு யானை வலம்வருவதால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், யானையை வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN




கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் பகுதியில் ஒற்றைக் காட்டு யானை வலம்வருவதால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், யானையை வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் அன்மை காலங்களாகவே காட்டு யானைகள் ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது.

விவசாயிகளின் தோட்டங்களில் பகல் நேரங்களில் முகாமிடும் யானைகளால் இதுவரை பல விவசாயிகளும் தொழிலாளர்களும் யானைகள் தாக்கி பலியாகியுள்ளனர். விளைபயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன. அவ்வப்போது குடியிருப்புகளையும் சேதப்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில், தேவர்சோலை அடுத்துள்ள செம்பக்கொல்லி கிராமத்திற்குள் நுழைந்த ஒற்றை யானை அங்குள்ள காப்பித் தோட்டத்தை சுற்றி வலம் வந்தது. அந்த பகுதி விவசாயிகள் விடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடந்தனர். யானையை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் கூட்டத்தில் கோபமடைந்த இபிஎஸ்!

இந்த சாதனையைச் செய்தது லோகாதானாம்!

சேலத்தில் கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை நாமக்கல்லில் மீட்பு

டயரில் எலுமிச்சை வைத்து பூஜை! மஹிந்திரா தாரை கரப்பான் பூச்சி போல கவிழ்த்த பெண்!!

ICU விவகாரம்! ”நீங்க” என EPS-ஐ சொல்லவில்லை! அதிமுகவைத்தான் சொன்னேன் - Udhayanidhi Stalin

SCROLL FOR NEXT