பாவூர்சத்திரம்: உலக மக்களை இயற்கை பேரிடரில் இருந்து காத்து நலமுடன் வாழ வேண்டி தோரணமலை முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
தென்காசி-கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன்கோயிலில் நில நடுக்கத்தில் சிக்கித்தவிக்கும் சிரியா, துருக்கி நாடுகள் சீரிய வளர்ச்சி பெறவும், உலக மக்கள் இயற்கை பேரிடரில் இருந்து காத்து நலமுடன், பலமுடன் வாழவும் வேண்டி சிறப்பு ஹோமம் வெள்ளிக்கிழமை (பிப்.10) காலை நடைபெற்றது.
சிறப்பு பூஜைகள்
இதையும் படிக்க | இந்தியர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கியதில் முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா?
முன்னதாக, இக்கோயிலில் மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் வருண கலச பூஜை மற்றும் வேல் பூஜை நடைபெற்றது.
மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கும் சிறப்பு அபிசேகம், தீபாராதனையும், சப்த கன்னிகள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும், மலை அடிவாரத்தில் உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் வருண கலச பூஜை
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.