தமிழ்நாடு

மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு நிலப்பிரச்னை அல்ல, நிதி தான் பிரச்னை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

DIN


சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை தாமதப்படுத்துவது மத்திய அரசு தான் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் குறித்து பேசிய மக்கள் நல்வாழ்த்துறை மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 750 படுக்கைகளுடன் 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றினார்கள். 2019 ஆம் ஆண்டு எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான பணிகளை மத்திய அரசு தொடக்கி வைத்துச் சென்றது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழ்நாடு அரசு சார்பில் 222 ஏக்கர் நிலம் அன்றைக்கே ஒப்படைக்கப்பட்டுவிட்டது. 

மதுரை எய்ம்ஸ்-க்கு நிலப்பிரச்னை எதுவும் இல்லை. நிதி பிரச்னை தான் உள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை தாமதப்படுத்துவது மத்திய அரசு தான்.

எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து தொடங்க மத்திய அரசிடம் பல முறை வலியுறுத்தினோம். 50 மாணவர்கள் சேர்க்கைக்கு மதுரை தனியார் மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி ஜிப்மர் கல்லூரியில் சேர்க்க சொன்னார்கள். ஜிப்மர் வேறு மாநிலம், கலைக்கல்லூரியிலோ, தனியார் மருத்துவ கலைக்கல்லூரியிலோ சேர்த்தால் சரியாக இருக்காது. எனவே ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். முதலாம் ஆண்டு
மாணவர்கள் 50 பேர், 2 ஆம் ஆண்டு மாணவர்கள் 50 பேர் என மொத்தம் 100 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு எய்ம்ஸ் தவிர பிற மாநிலத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. மதுரையோடு அறிவிக்கப்பட்ட ராய்ப்பூர் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. ஜப்பான் நிதி உதவியுடன் மதுரை எய்ம்ஸ் பணிகள் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். 

2024 ஆம் ஆண்டு இறுதியில் தான் பணிகள் தொடங்க முடியும் என கூறியுள்ளனர். 2028 இல் முடிவடையும் என தெரிவித்துள்ளனர் என்று மா.சுப்பிரமணியன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

SCROLL FOR NEXT