தமிழ்நாடு

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில்  ரூ.86  லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறையினா் நடத்திய சோதனையில் ரூ.86 லட்சத்து 13 ஆயிரத்து 912 மதிப்பிலான 1 கிலோ 516 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

DIN


திருச்சி:  திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறையினா் நடத்திய சோதனையில் ரூ.86 லட்சத்து 13 ஆயிரத்து 912 மதிப்பிலான 1 கிலோ 516 கிராம் தங்கம் பறிமுதல் செய்தனர். 

துபை மற்றும் சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அப்போது, கணினி உதிரி பாகம், ஆம்ப்ளிஃபையர் மற்றும் பேண்ட் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்திருந்த 1 கிலோ 516 கிராம்  எடையுள்ள ரூ.86.13 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனர். 

இதுதொடர்பாக தங்கம் கடத்தி வந்த இரண்டு பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராதாபுரம் அருகே சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற மக்கள் கோரிக்கை

2026 தோ்தலில் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்: ஏ.ஐ.சி.சி.டி.யு ஆலோசகா் எஸ்.குமாரசாமி

பாஜகவினா் ரத்த தானம்

ஆட்சியா் அலுவலகத்தில் சமுகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

SCROLL FOR NEXT