தமிழ்நாடு

நாட்டிலேயே முதன்முறையாக ரயில் நிலையத்தில் கருவாடு விற்பனையகம்: எங்கு தெரியுமா?

நாட்டிலே முதன்முறையாக மதுரை ரயில் நிலையத்தில் கருவாடு விற்பனையகம் திறக்கப்பட்டுள்ளது. இது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.

DIN


நாட்டிலே முதன்முறையாக மதுரை ரயில் நிலையத்தில் கருவாடு விற்பனையகம் திறக்கப்பட்டுள்ளது. இது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.

பிரபலமான உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் அந்தந்த மாவட்ட ரயில் நிலையங்களில் பிரதமரின் 'ஒரு நிலையம், ஒரு பொருள்' என்ற திட்டத்தின் கீழ் விற்பனை நிலையங்களை ரயில்வே நிர்வாகம் அமைத்து வருகிறது. 

இந்த திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயின் கோட்டத்துக்குள்பட்ட ஆறு ரயில்வே கோட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பிரபலமான உள்ளூர் தயாரிப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மதுரை ரயில் நிலையத்தில் சுங்குடி சேலை, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சின்னாளப்பட்டி கைத்தறி சேலைகள், தூக்குடியில் மக்ரூன், ராமேசுவத்தில் கடல் பாசி பொருள்கள், விருதுநகரில் சாத்தூர் காராச்சேவு, கோவில்பட்டியில் கடலை மிட்டாய், தென்காசியில் மூங்கில் பொருள்கள் இந்த விற்பனையகம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், மதுரை ரயில் நிலையத்தின் உள்புறம் நாட்டிலேயே முதன்முறையாக கருவாடு விற்பனையகம் தொடங்கப்பட்டுள்ளது. 

மண்டபம் பகுதியைச் சேர்ந்த புதுமைப் பெண்கள் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் இந்த விற்பனையகம் தொடங்கப்பட்டுள்ளது. 

மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து, தங்கள் மாவட்டத்தின் பிரபலமான கருவாட்டை தயாரித்து இங்கு கொண்டு வந்து விற்பனைக்கு வைத்துள்ளனர்.  

நாட்டிலேயே முதன்முறையாக ரயில் நிலையத்தில் கருவாடு விற்பனையகம் மதுரை ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழியில் ஒருநாள் வழிபாட்டுக்கு ஆயிரம் ஆண்டுகள் பலன்!

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

உத்தர பிரதேச தொழிலாளி கொலை: நண்பா் கைது

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

முன்னாள் திமுக ஒன்றியச் செயலா் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

SCROLL FOR NEXT