கோப்புப் படம் 
தமிழ்நாடு

கோவை கொலை: இருவரை சுட்டு பிடித்தது காவல்துறை!

கோவை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கொலை சம்பவத்திற்கு தொடர்புடைய இருவரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர்.

DIN

கோவை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கொலை சம்பவத்திற்கு தொடர்புடைய இருவரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர்.

கோவை நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றில் கையெழுத்திட வந்த கோகுல் என்ற இளைஞரை நீதிமன்றத்திற்கு வெளியே 5 பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும் அரிவாலால் சரமாரியாக வெட்டியது. கோகுலடன் வந்த மனோஜ் என்ற இளைஞரையும் மர்ம கும்பல் தாக்கியது.

இதில், கோகுல் பலியான நிலையில் மனோஜ் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைத்து கோவை மற்றும் அண்டை மாவட்டங்களில் தீவிர வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கோத்தகிரியில் - மேட்டுபாளையம் சாலையில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கெளதம் மற்றும் ஜோஷ்வா இருவரை காலில் துப்பாக்கியால் சுட்டு காவல்துறையினர் பிடித்துள்ளனர்.

பிடிபட்ட இரு இளைஞர்களையும் அரசு மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். சிகிச்சையை தொடர்ந்து இருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT