பகிரப்பட்டு வரும் வே. பிரபாகரனின் புதியப் படம் 
தமிழ்நாடு

இதுதான் பிரபாகரனின் லேட்டஸ்ட் படமா?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனின் புதிய புகைப்படமொன்று கிடைக்கப் பெற்றுள்ளது.

DIN

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனின் புதிய புகைப்படமொன்று கிடைக்கப் பெற்றுள்ளது.

எனினும், இந்தப் படத்தின் நம்பகத்தன்மை பற்றி உறுதி செய்ய இயலவில்லை.
இந்தப் படத்தில் நரைத்த தாடியுடன் பிரபாகரன் காட்சியளிக்கிறார்.

பிரபாகரன் நலமாக இருப்பதாக  நேற்றுதான்  பழ. நெடுமாறன் அறிவித்தார். இந்த  நிலையில்தான், இன்று அவரின் புதிய புகைப்படம் வெளிவந்துள்ளது. 

தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர் சந்திப்பின்போது பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அறிவித்தார். 

இதனைத் தொடர்ந்து இதுதொடர்பாக பல்வேறு தலைவர்களும்  கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியான தகவலுக்கு பல தலைவர்கள் வரவேற்றுத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சிலர், பிரபாகரன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனக் குறிப்பிட்டனர். இலங்கை ராணுவமும் இதற்கு மறுப்பு தெரிவித்து, 2009 மே 18-ல் நடந்த இறுதிகட்ட போரில் பிரபாகரன் உயிரிழந்ததற்கான ஆதாரம் இருப்பதாகத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில்தான், பிரபாகரனின் புதிய புகைப்படம் கிடைக்கப்பெற்றுள்ளது. பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்ற பெரும் விவாதத்துக்கு இடையே, தற்போது கிடைத்துள்ள புதிய படம் பிரபாகரனுடையதுதானா? என்பதை  உறுதிப்படுத்த  இயலவில்லை. எனினும், சில வட்டாரங்களில் இந்தப் படம் பகிரப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT