கோவை: கோவை தனியார் கல்லூரியில் வட மாநில தொழிலாளர்களும், மாணவர்களும் மோதிக் கொள்ளும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் கல்லூரியின் உணவகத்தில் வட மாநில தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
மாணவர்களை மிரட்டும் நோக்கில் கட்டை, இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களுடன் வடமாநில தொழிலாளர்கள் கல்லூரி வளாகத்திற்குள் வலம் வந்ததாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், மோதல் குறித்த சரியான தகவல் இதுவரை வெளியாகவில்லை.
மேலும், கல்லூரியில் இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் விடியோ இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.