தமிழ்நாடு மின்வாகன கொள்கையை வெளியிட்டார் முதல்வர்!
தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை 2023ஐ தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழ்நாடுதமிழ்நாடு மின்வாகன கொள்கையை வெளியிட்டார் முதல்வர்!
தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை 2023ஐ தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை 2023ஐ தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழ்நாடு மின்வாகனக் கொள்கையின் அவசியம் மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் உற்பத்தியில் மட்டுமின்றி, மின்வாகன உற்பத்தியிலும், தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்நிலையைத் தக்கவைத்து, மேம்படுத்திடவும், மாறிவரும் காலச் சூழ்நிலைக்கேற்ப மின்வாகன உற்பத்தித் துறையில் உள்ள சவால்களை திறமையுடன் எதிர்கொள்ளும் வகையிலும், ஒரு மாறுபட்ட கொள்கை அணுகுமுறையும், தற்போதைய கொள்கையில் சில மாற்றங்களும் தேவைப்படுகிறது.
மின்சார வாகனங்கள் பயன்படுத்துவதை வெகுவாக அதிகரித்திடும் நோக்கத்திலும், விநியோகம், தேவைகள் / பயன்பாடுகள் மற்றும் சூழல் அமைப்பை நன்கு வலுப்படுத்திடும் வகையிலும் தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023 என்ற திருத்திய கொள்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இந்த கொள்கை, வெளியிடப்பட்ட
தினத்திலிருந்து ஐந்து வருடங்கள் நடைமுறையில் இருக்கும்.
மின்வாகன உற்பத்தித் துறையில் ரூ.50 ஆயிரம் கோடி முதலீடுகள் மற்றும் 1.50 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளது. சிறப்பு ஊக்கச் சலுகைகள்
மின்னேற்ற நிலையங்களுக்கான ஊக்கச் சலுகைகள், பொது மின்கல மாற்று நிலையங்களுக்கான ஊக்கச் சலுகைகள், சாலை வரி விலக்கு, பதிவுக் கட்டணம் மற்றும் அனுமதி கட்டணம் தள்ளுபடி ஆகியவை டிசம்பர் 31,2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே. விஷ்ணு, ஹுண்டாய், டி.ஐ க்ளீன் மொபிலிடி, ராயல் என்பீல்ட், ஓலா ஆகிய
நிறுவனங்களின் தலைவர்கள்/தலைமைச் செயல் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.