தமிழ்நாடு

காபி அருந்துவதால் குழந்தைகளுக்கு மனநிலை பாதிக்கும்: மருத்துவர்கள் எச்சரிக்கை

DIN

காபி மற்றும் காஃபின் கலந்த பானங்களை அருந்தும் குழந்தைகளுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 12 வயதுக்கும் குறைந்த சிறாருக்கு அத்தகைய பானங்கள் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
 இதுகுறித்து பொது மருத்துவ நிபுணர் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் கூறியதாவது:
 காஃபின் என்பது காபி மற்றும் கார்பனேற்றப்பட்ட புத்துணர்ச்சி பானங்கள் போன்றவற்றில் காணப்படும் ஒரு பொதுவான மூலப்பொருள் ஆகும். இது உலகளவில் அதிகப்படியான மக்கள் விரும்பி அருந்தும் பானங்களில் இரண்டறக் கலந்துள்ளது.
 அண்மைக் காலமாக குழந்தைகள் இந்த பானங்களுக்கு அடிமையாகி உள்ளனர்.
 பொதுவாக காஃபின் மூலப்பொருளானது ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்கிறது. மேலும், முறையான உறக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
 காஃபின் காரணமாக குழந்தைகள் சரியாக தூங்கவில்லை என்றால் அவர்களுக்கு உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். அதுமட்டுமல்லாது குழந்தைகளுக்கு கவனச் சிதறல் மற்றும் மன நல பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
 இது அவர்களது கல்வியை பாதிக்கக்கூடும். குறிப்பாக 12 வயதுக்குட்பட்ட சிறாருக்கு காஃபின் பானங்கள் ஆபத்தானவை.
 எனவே, அவற்றைத் தவிர்த்து பழச்சாறு, ஊட்டச்சத்து பானங்கள், இளநீர், பால், மூலிகை தேநீர் போன்றவற்றை அருந்தலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’முஸ்லிம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

வேட்பாளர்களும் வழக்குகளும்!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

SCROLL FOR NEXT