தமிழ்நாடு

தமிழக-கர்நாடக எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்!

கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு எதிரொலியாக பாலாறு வழியாக தமிழக-கர்நாடகம் செல்லும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

DIN

கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு எதிரொலியாக பாலாறு வழியாக தமிழக-கர்நாடகம் செல்லும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

தமிழக-கா்நாடக எல்லையில் உள்ளது பாலாறு வனப்பகுதி. இங்கு காவிரியுடன் பாலாறு இணைகிறது. இங்குள்ள அடா்ந்த வனப்பகுதியில் யானைகளும், மான்களும் அதிகளவில் உள்ளன. மலையோர தமிழக கிராமங்களில் இருந்து சிலா் பரிசலில் பாலாற்றைக் கடந்து சென்று கா்நாடக வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனா். 

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 2 பரிசல்களில் சென்றவா்கள் கா்நாடக வனப் பகுதி பாலாற்றங்கரையில் இருந்தபடியே வேட்டையில் ஈடுபட்டுள்ளனா். அப்போது அங்கு வந்த கா்நாடக வனத் துறையினா், இவா்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனா்.

இந்த துப்பாக்கிச்சூட்டின்போது மீனவர் ராஜா என்பவர் மாயமாகியிருந்தார். இந்நிலையில், மேட்டூர் அருகே காணாமல்போன மீனவர் ராஜாவின் உடல் தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பாலாற்றில் இன்று சடலமாக மீட்கப்பட்டது.

பாலாற்றில் மிதந்த மீனவர் ராஜாவின் உடலைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இரு மாநில எல்லையில் பதற்றம் நிலவி வருகின்றது. இதையடுத்து அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. 

தமிழக மீனவர் ராஜாவை கர்நாடக வனத்துறை சுட்டதா என விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், பாலாறு வழியாக தமிழக-கர்நாடக எல்லையில் செல்லும் போக்குவரத்துக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

நவி முமையில் நடனப் பாரை தாக்கி சேதப்படுத்திய நவநிர்மாண் சேனை தொண்டர்கள் !

ஆடிப்பெருக்கு தீர்த்தவாரி: கொள்ளிடம் ஆற்றில் எழுந்தருளிய நடராஜர்!

யோவ் நான் கேட்டனா...? லோகேஷ் கனகராஜை கிண்டல் செய்த ரஜினி!

பாஜக கூட்டணியால் உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிருப்தி: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT