கோப்புப்படம் 
தமிழ்நாடு

வெளியூரிலிருந்து பகலில் சென்னைக்கு வரும் பேருந்துகள் தாம்பரம் வழியாக செல்லும்!

வெளியூர்களில் இருந்து பகல் நேரத்தில் சென்னை வரும் அனைத்துப் பேருந்துகளையும் தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. 

DIN

வெளியூர்களில் இருந்து பகல் நேரத்தில் சென்னை வரும் அனைத்துப் பேருந்துகளையும் தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. 

வெளியூர்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் பெரும்பாலாக பெருங்களத்தூர், மதுரவாயல் வழியாக கோயம்பேடு வந்தடையும். போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. 

இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக வெளியூர்களில் இருந்து பகல் நேரத்தில் சென்னை வரும் அனைத்துப் பேருந்துகளையும் தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. 

இதன்படி மாலை 5 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக சென்னைக்கு வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு செல்லும் என்றும் இதன் மூலமாக தாம்பரம், குரோம்பேட்டை, வடபழனி செல்லும் பயணிகள் பயனடைவதுடன் போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தாம்பரம் பேருந்து நிறுத்தத்திற்கு இடதுபுறமாக நிறுத்தி பயணிகளை இறக்கிவிட ஓட்டுநர், நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT