தமிழ்நாடு

மனைவியைக் கொல்ல பிச்சைக்காரன் உருவெடுத்த பேராசிரியர்: அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் உதவிப் பேராசிரியர் ஒருவர் பிச்சைக்காரன் போல் வேடமணிந்து தனது மனைவியைக் கொல்லவந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ENS

சென்னையில் உதவிப் பேராசிரியர் ஒருவர் பிச்சைக்காரன் போல் வேடமணிந்து தனது மனைவியைக் கொல்லவந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நந்தனம் ஆண்களுக்கான கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார் குமாரசாமி(56). இவரது மனைவி கே.ஜெயவாணி தனியார் பொறியியல் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் உள்ளனர். இவர்கள் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு எழும்பூரில் உள்ள ஊராட்சி சாலையில் வசித்து வந்தனர். 

கடந்த வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் ஜெயவாணி, எழும்பூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்திலிருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது பிச்சைக்காரன் ஒருவன் அவளை நோக்கி ஓடிவந்து பிளேடால் முகத்தை சரமாரியாகத் தாக்க முயன்றான். ஜெயராணி முகத்தை மூடிக்கொண்டு சம்பவ இடத்தை விட்டு ஓடினார். 

அக்கம்பக்கத்தினர் ஓடிவருவதற்குள் குமாரசாமி விடாமல் துரத்திச் சென்று மேலும் பலமுறை சரமாரியாக பிளேடால் வெட்டியுள்ளார். ஆனால் ஜெயராணி சிக்காமல் ஓடியுள்ளார். பின்னர் அங்கிருந்தோர் ஜெயவாணியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது புகாரின்பேரில் எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குமாரசாமியை கைது செய்தனர்.

விசாரணையில், தன் மனைவி சக ஊழியருடன் தொடர் வைத்திருப்பதாகவும் இதனால் அவளைக் கொல்ல திட்டமிட்டிருந்ததாகவும் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார் குமாரசாமி.

ஜெயவாணி திருமணமானபோது மாணவி. தந்தையின் குடும்ப நண்பராக இருந்த குமாரசாமி, அவரது கல்விச் செலவுகளைக் கவனித்து வந்தார். தன் மனைவி மிகவும் இளமையாக இருந்ததால் அவரது நம்பகத்தன்மையை சந்தேகிக்கத் தொடங்கினார். இதுதொடர்பாக குமாரசாமி மீது கொலை முயற்சி மற்றும் பெண்கள் துன்புறுத்தல் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடையநல்லூா், வீரகேரளம்புதூா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

அரசு மருத்துவமனைகளில் வலிமையான குடும்ப இயக்கம் திட்ட முகாம் தொடக்கம்

தென்காசியில் மகளிா் குழுவினருக்கு ரூ. 55.44 கோடி நலத்திட்ட உதவிகள்

பெரியாா் எங்கும், என்றும் நிலைத்திருப்பாா்: முதல்வா்

வரி ஏய்ப்பு புகாா்: நகைக் கடையில் வருமான வரித் துறை சோதனை

SCROLL FOR NEXT