தமிழ்நாடு

ஏடிஎம் கொள்ளை வழக்கு: திருவண்ணாமலை நீதிபதி முன்பு 2 பேர் ஆஜர்!

DIN

திருவண்ணாமலையில் நடந்த ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரியாணாவைச் சேர்ந்த இருவரை காவல் துறையினர் நீதிபதி முன்பு இன்று காலை ஆஜர்படுத்தினர். 

திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூா் பகுதிகளில் இயங்கி வந்த 4 ஏடிஎம் மையங்களில் கடந்த 12-ஆம் தேதி அதிகாலை புகுந்த மா்ம கும்பல், பணம் வழங்கும் இயந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சத்தை திருடிச் சென்றது.

இதில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆந்திரம், கா்நாடகம், ஹரியாணா மாநிலங்களில் தனிப்படை அதிகாரிகள் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடைய இருவரை நேற்று இரவு காவல் துறையினர் ஹரியாணாவில் கைது செய்தனர். அவர்கள் இருவரையும் காவல் துறையினர் விமானம் மூலம் தமிழகம் அழைத்து வந்தனர்.

திருவண்ணாமலை நீதிமன்ற நீதிபதி முன்பு பிடிபட்ட இருவர் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை தனி வாகனத்தில் அழைத்து வந்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: ஜூலை 10-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு ஜூலை 10-க்கு ஒத்திவைப்பு!

கோபா அமெரிக்காவின் தீம் பாடல்!

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை!

எங்கே செல்கிறார் சோபிதா?

SCROLL FOR NEXT