வலங்கைமான் அருகே உத்தமதானபுரத்தில் உள்ள உ.வே.சா நினைவு இல்லத்தில் அவரது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்தார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ. 
தமிழ்நாடு

தமிழ்த்தாத்தா உ.வே.சா. பிறந்தநாள்: ஆட்சியர் சாருஸ்ரீ மரியாதை!

வலங்கைமான் அருகே உத்தமதானபுரத்தில் உ.வே.சா. திருவுருவ சிலைக்கு திருவாரூர் ஆட்சியர் சாருஸ்ரீ மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். 

DIN


நீடாமங்கலம்: வலங்கைமான் அருகே உத்தமதானபுரத்தில் உ.வே.சா. திருவுருவ சிலைக்கு திருவாரூர் ஆட்சியர் சாருஸ்ரீ மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். 

வலங்கைமான் வட்டம் உத்தமதானபுரம் கிராமத்தில் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் என்ற உ. வே. சாமிநாதையர். தமிழ்த்தாத்தா என அழைக்கப்படும் உ.வே.சா அழியும் நிலையில் ஓலைச்சுவடிகளில் இருந்த பல்வேறு தமிழ் இலக்கியங்களை பதிப்பித்து தமிழ்மொழிக்கு தொண்டாற்றியவர். இவரின் 169ஆம் ஆண்டு பிறந்து நாள் விழா உத்தமதானபுரத்தில் உள்ள நினைவு இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர்  சாருஸ்ரீ உ.வே.சா.திருவுருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.  

திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, வட்டாட்சியர் சந்தானகோபாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலா்கள் கமலராஜன், பொற்செல்வி, ஒன்றியக்குழு உறுப்பினர் வீ.அன்பரசன், ஊராட்சி மன்ற தலைவர் செங்குட்டுவன் உள்பட பலரும் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துறையூா் பகுதியில் நாளை(ஆக.4) மின் தடை

மணப்பாக்கம் சின்ன கன்னியம்மன் கோயில் ஆடி தீமிதி விழா

முசிறி அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

ஆக. 7-இல் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் முப்பெரும் விழா

முசிறியில் காரில் வெளி மாநில மதுபாட்டில் கொண்டு சென்றவா் கைது

SCROLL FOR NEXT