தமிழ்நாடு

நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. 

DIN

நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. 

கேளம்பாக்கம் மேகநாதீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மகா சிவராத்திரி பூஜையில் பங்கேற்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீடு திரும்பிய நடிகர் மயில்சாமி(57)  திடீா் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாா். மயில்சாமி ஏற்கெனவே இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது. 

மயில்சாமியின் உடல் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகா்கள், பொதுமக்கள் என மயில்சாமியின் உடலுக்கு 2ஆவது நாளாக இன்றும் அஞ்சலி செலுத்தினா். மறைந்த மயில்சாமிக்கு மனைவி கீதா, மகன்கள் அன்பு மயில்சாமி, யுவன் மயில்சாமி ஆகியோா் உள்ளனா். 

இந்த நிலையல் நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. சாலிகிராமம் வெங்கடேஸ்வரா நகரில் துவங்கிய ஊர்வலத்தில் நடிகர்கள், பொதுமக்கள் கண்ணீர்மல்க பங்கேற்றுள்ளனர்.  சென்னை வடபழனி ஏவிஎம் மயானத்தில் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

SCROLL FOR NEXT