தமிழ்நாடு

நடிகர் மயில்சாமியின் உடல் தகனம்

மயில்சாமி உடல் சாலிகிராமத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வடபழனி ஏ.வி.எம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

DIN

மயில்சாமி உடல் சாலிகிராமத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வடபழனி ஏ.வி.எம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

கேளம்பாக்கம் மேகநாதீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மகா சிவராத்திரி பூஜையில் பங்கேற்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீடு திரும்பிய நடிகர் மயில்சாமி(57)  திடீா் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாா். மயில்சாமி ஏற்கெனவே இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது. 

மயில்சாமியின் உடல் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகா்கள், பொதுமக்கள் என மயில்சாமியின் உடலுக்கு 2ஆவது நாளாக இன்றும் அஞ்சலி செலுத்தினா். மறைந்த மயில்சாமிக்கு மனைவி கீதா, மகன்கள் அன்பு மயில்சாமி, யுவன் மயில்சாமி ஆகியோா் உள்ளனா். 

இந்த நிலையல் மயில்சாமி உடல் சாலிகிராமத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வடபழனி ஏ.வி.எம் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலம் ஒன்றரை மணிநேரத்திற்கு மேல் நீடித்தது. மயில்சாமியின் இறுதி ஊர்வலம், இறுதிச்சடங்களில் ஏராளமான திரையுலகினர், பொதுமக்கள் கண்ணீர்மல்க பங்கேற்றனர். 

முன்னதாக இன்று காலை மயில்சாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், மயில்சாமியின் கடைசி ஆசை நிறைவேற்றுவேன் என்று உறுதியளித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT