தமிழ்நாடு

விழுப்புரம் காப்பகத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் சோதனை!

DIN

விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரிலுள்ள அன்பு ஜோதி ஆதரவற்றோர் காப்பகத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் செவ்வாய்கிழமை சோதனை நடத்தினர்.

குண்டலப்புலியூரில் அன்புஜோதி ஆசிரமம் என்ற பெயரில் இயங்கி வந்த ஆதரவற்றோர் தனியார் காப்பகத்தில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும், பெண்கள் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுவதாக சர்ச்சை எழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கடந்த 10-ஆம் தேதி செஞ்சி டி.எஸ்.பி. பிரியதர்ஷினி தலைமையிலான காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் சோதனை நடத்தினர். 

இதைத் தொடர்ந்து  காப்பக உரிமையாளர் ஜிபீன்பேபி (48), மனைவி மரியாள் ஜிபீன் (45) உள்பட 9 பேர் மீது 13 பிரிவுகளின் வழக்குகள் பதியப்பட்டு, கைது செய்யப்பட்டனர். மேலும் காப்பகத்தில் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள், மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் மாற்றப்பட்ட நிலையில், சிபிசிஐடி எஸ்.பி. அருண் பாலகோபாலன் தலைமையில், இப்பிரிவின் விழுப்புரம் ஏடிஎஸ்பி கோமதி உள்ளிட்ட 20 பேர் அடங்கிய குழுவினர், குண்டலப்புலியூரிலுள்ள காப்பகத்தில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

காப்பகத்திலுள்ள ஒவ்வாரு அறைக்கும் சென்று சிபிசிஐடி காவல் துறையினர் சோதனை நடத்தினர். மேலும் தடவியல் நிபுணர் குழுவும் சோதனை நடத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

SCROLL FOR NEXT