தமிழ்நாடு

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி: தமிழக அரசு மேல்முறையீடு

DIN

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தந்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

மார்ச் 5 ஆம் தேதி அணிவகுப்பிற்கு அனுமதி தரக் கோரி டிஜிபிக்கு ஆர்எஸ்எஸ் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் தமிழ்க அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அனுமதி தாராவிடில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என ஆர்எஸ்எஸ் ஏற்கனவே கூறியிருந்தது.

ஆர்.எஸ்.எஸ். பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய திடலில் நடத்த வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும், அவ்வாறு விண்ணப்பித்தால் சட்டப்படி பரிசீலனை செய்து முடிவெடுக்க காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்காத வகையில் அரசு செயல்பட வேண்டும் என்றும், கடும் கட்டுப்பாடுகளுடன் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கலாம் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளன்று தமிழகத்தில்  பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிருந்த நிலையில், அதற்கு காவல்துறை அனுமதி மறுத்து இருந்தது.

கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட 6 இடங்கள் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய 3 இடங்கள், உள்ளிட்ட 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தலாம். 6 இடங்களில் மட்டும் இயல்பு நிலை திரும்பும்வரை ஆர்.எஸ்.எஸ்.  காத்திருக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தந்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூா் அருகே சாலை விபத்து: 4 போ் காயம்

மணப்பாறையில் காா் எரிந்து நாசம்

விமான நிலைய மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

இந்தியா்களுக்கான கட்டணமில்லா சுற்றுலா விசா நீட்டிப்பு: இலங்கை

உயா்கல்வி சந்தேகங்களுக்கு விளக்கம்: ஏபிவிபி அழைப்பு

SCROLL FOR NEXT