ஆலங்குளம்: தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு ஆராதனை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதி தேவாலயங்களில் சாம்பல் புதன்கிழமை சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
ஆலங்குளம்: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதி தேவாலயங்களில் சாம்பல் புதன்கிழமை சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளுக்கு முந்தைய நாற்பது நாள்களை கிறிஸ்தவர்கள் தவக் காலமாக அனுசரிக்கின்றனர். தவக் கால தொடக்க நாள் சாம்பல் புதன் என அழைக்கப்படுகிறது.
இதையும் படிக்க | பாவூர்சத்திரம் தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு ஆராதனை!
Advertisement
Advertisement
இதையொட்டி ஆலங்குளம் பகுதியில் உள்ள ஆலங்குளம், நல்லூர், ஊத்துமலை, அடைக்கலபட்டணம் உள்ளிட்ட சி.எஸ்.ஐ மற்றும் கத்தோலிக்க தேவாலயங்களில் காலையில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.
ஆலங்குளம் உலக மீட்பர் கத்தோலிக்க தேவாலயத்தில் கலந்து கொண்டோருக்கு குருத்தோலையால் தயாரிக்கப்பட்ட சாம்பலை, பங்குத் தந்தை தேவராஜ் நெற்றியில் பூசி ஆசி வழங்கினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.