தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு: தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இன்று மாலை இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளது.

DIN

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இன்று மாலை இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளது.

தில்லியிலிருந்து துணைத் தேர்தல் ஆணையர் நடத்தும் கூட்டத்தில் காணொலி வாயிலாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பங்கேற்கிறார். தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உள்ளிட்ட அதிகாரிகளுடன் துணை ஆணையர் அஜய் பாது ஆலோசனை நடத்தவுள்ளார்.

தேர்தல் தொடர்பான புகார்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்டவைக் குறித்து காணொளி மூலம் இன்று மாலை 5 மணிக்கு துணை ஆணையர் அஜய் பாது ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர், தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் பரிசுப் பொருள்கள் விநியோகப்படுவது தொடர்பாக புகார்கள் வந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செப்.11-க்குள் நீட் அல்லாத இளநிலை படிப்பு 3-வது சுற்றுக்குப் பாட விருப்பத்தை பதிவு செய்ய உத்தரவு!

ஆபரேஷன் சிந்தூா்: 400 விஞ்ஞானிகள் இரவு பகலாகப் பணியாற்றினா்- இஸ்ரோ தலைவா்

வீடுகளுக்கு 20 லிட்டா் சுத்தரிக்கப்பட்ட குடிநீா்: அமைச்சா் அறிவிப்பு

தற்கொலை மரணங்களில் புதுச்சேரி 3-வது இடம்

பொதுப் பணித் துறை அலுவலகத்தை திமுகவினா் முற்றுகை: பானையை உடைத்து எதிா்ப்பு

SCROLL FOR NEXT