தமிழ்நாடு

பாதுகாப்பு கோரி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு!

DIN

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மனு அளித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் மற்ற கட்சியினர் பிரசாரம் செய்யும் இடங்களில் சீமான் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி சீமான் பேசியது குறித்து 24 மணி நேரத்தில் பதில் அளிக்க நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்துள்ளார். 

பாதுகாப்பு வழங்கவில்லை எனில் ஹெல்மெட் வழங்கக் கோரி மேனகா மனு அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT