தூத்துக்குடியில் வழக்குரைஞர்கள் சாலை மறியல் போராட்டம்
தூத்துக்குடியில் வழக்குரைஞர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வழக்குரைஞர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் வழக்குரைஞர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வழக்குரைஞர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி அய்யனடைப்பு சோரீஸ்புரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்ணு மகன் முத்துக்குமார் (43). வழக்குரைஞரான இவர், நேற்று மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சிப்காட் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வழக்குரைஞர் முத்துக்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில், தொடர்புடைய நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், வழக்குரைஞர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும், தூத்துக்குடி வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில், நீதிமன்றம் முன்பு பாளையங்கோட்டை சாலையில் வழக்குரைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | தூத்துக்குடியில் வழக்குரைஞர் வெட்டிக் கொலை
மேலும், கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் வரை தொடர் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதாக வழக்குரைஞர் சங்க தலைவர் ஜோசப் செங்குட்டுவன் தெரிவித்தார்.
இந்த போராட்டத்தில், வழக்குரைஞர் சங்க துணைத் தலைவர் செல்வின் பர்ணாந்து, செயலர் மார்க், வழக்குரைஞர்கள் யு.எஸ்.சேகர், சுரேஷ்குமார், அதிசயகுமார், மாடசாமி, எஸ்.எஸ்.பி அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.