தமிழ்நாடு

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்: வைத்திலிங்கம்

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். 

DIN

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். 

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வானது செல்லும் என்றும் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் இன்று(வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட ஓ. பன்னீர்செல்வத்தின் மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

உச்சநீதிமன்ற தீர்ப்பு இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக வந்துள்ளது ஓபிஎஸ் தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று கூறியுள்ளார். 

அதிமுக பொதுக்குழுவை கூட்டியதுதான் செல்லும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மாறாக, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சொல்லவில்லை. 

பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக, தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்மார்ட் வாட்ச்சில் இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் - எப்படி?

ஒரு நாள் அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பில்லை!

வெற்றி உரையில் நேருவை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

தீயவர் குலை நடுங்க வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT