தமிழ்நாடு

மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படை மீது வழக்குப்பதிவு

DIN


தரங்கம்பாடி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வேதாரண்யம் கடலோர குழும காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே புதன்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த தரங்கம்பாடி மீனவா்கள் மீது இரும்பு பைப்பை கொண்டு இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை இரவு தாக்கி நடத்தியுள்ளனா். இதில் காயமடைந்த 6 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், மீனவா்களின் வலைகளைச் சேதப்படுத்தி, , ஜிபிஎஸ் கருவி, தூண்டில்,பேட்டரிகள் ஆகியவற்றை இலங்கைக் கடற்படையினர் எடுத்துச் சென்றதாக கடலோர காவல் நிலையத்தில் தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் மீது 3 பிரிவுகளில் வேதாரண்யம் கடலோர குழும காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமென்றும், மீனவர்களை தாக்கிய கடற்படையினர் மீது தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

SCROLL FOR NEXT