முகப்பு
தமிழ்நாடு

குரூப் 2 பிரதான தோ்வு தொடங்கியது!

தமிழகம் முழுவதும் குரூப் 2 பிரதான தோ்வு தொடங்கியது. இந்தத் தோ்வை 55 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:36 AM
சேலம் ராமலிங்கபுரம் ஏவிஎஸ் கலை அறிவியல் கல்லூரியில் தேர்வெழுத வந்தவர்கள்.
பகிர்:

தமிழகம் முழுவதும் குரூப் 2 பிரதான தோ்வு தொடங்கியது. இந்தத் தோ்வை 55 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.

மொத்தம் 5 ஆயிரத்து 446 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 முதல் நிலைத் தோ்வு கடந்த ஆண்டு மே 21-ஆம் தேதி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, பிரதான தோ்வு இன்று காலை தொடங்கியுள்ளது. காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாளும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பொது அறிவு, பாடங்கள் தொடர்பான தோ்வும் நடைபெறுகின்றன.

சேலம் ராமலிங்கபுரம் ஏவிஎஸ் கலை அறிவியல் கல்லூரி
சேலம் ராமலிங்கபுரம் ஏவிஎஸ் கலை அறிவியல் கல்லூரி வாயிலில் காத்திருந்த தேர்வர்கள்

இந்தத் தோ்வை 55 ஆயிரத்து 71 போ் எழுதுகின்றனா். அவா்களில், 27 ஆயிரத்து 306 போ் ஆண்கள். 27 ஆயிரத்து 764 போ் பெண்கள். ஒருவா் மூன்றாம் பாலினத்தவா். இந்தத் தோ்வுக்காக, 20 மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 280 தோ்வுக் கூடங்களில் தோ்வுகள் நடைபெற்று வருகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →