திருச்செந்தூர் கோயிலில் மாசித் திருவிழா தொடங்கியது! 
தமிழ்நாடு

திருச்செந்தூர் கோயிலில் மாசித் திருவிழா தொடங்கியது!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி  திருக்கோயிலில் மாசித் திருவிழா   சனிக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

DIN

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி  திருக்கோயிலில் மாசித் திருவிழா   சனிக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்செந்தூரில் மாசித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை 4 மணியளவில்  கொடிப்பட்டமானது வெள்ளிப்பல்லக்கில் வைத்து கொண்டுவரப்பட்டு அதிகாலை  5.20  மணிக்கு கொடியேற்றப்பட்டது.

தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு  காலை 6.43  மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம், தவத்திரு. திருச்சிற்றம்பலம் தம்பிரான் சுவாமிகள், திருச்செந்தூர் நீதித்துறை நடுவர் வசித்குமார், திருக்கோயில் இணை ஆணையர் மு.கார்த்திக்,  அறங்காவலர் பா.கணேசன், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார்,  திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்த கோடிகள் கலந்து கொண்டனர்.

திருவிழாவின் முக்கிய நாளான பத்தாம் திருவிழா தேரோட்டம் மார்ச் 6-ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெறுகிறது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் இரா.அருள்முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கச் சிலை... பூமி பெட்னெகர்!

கமல்ஹாசன் தயாரிப்பில் மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - சுந்தர் சி கூட்டணி!

ஜாய் கிரிசில்டாவின் மிரட்டலின் பேரில் திருமணம் நடந்தது! - மாதம்பட்டி ரங்கராஜ்

பறவைகளில் அவள் மணிப்புறா... கீர்த்தி ஷெட்டி!

ஓசையின்றிப் பூ பூக்கும்... ராஷி கன்னா!

SCROLL FOR NEXT