தமிழ்நாடு

லாரிகள் நேருக்கு நேர் மோதி 5 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் அருகே இரு லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் பலியாகினர்.

DIN

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் அருகே இரு லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் பலியாகினர்.

வெள்ளக்கோவில் ஓலப்பாளையம் பச்சாபாளையத்தைச் சேர்ந்த ஒரு நபர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

அதற்கு திதி கொடுப்பதற்காக அதே ஊரைச் சேர்ந்த உறவினர்கள் 35 பேர், ஒரு சரக்கு லாரியில் கொடுமுடி காவிரி ஆற்றுக்குச் சென்று விட்டு பச்சாபாளையம் திரும்பிக் கொண்டிருந்தனர். 

அப்போது வழியில் முத்தூர் - காங்கயம் சாலை வாலிபனங்காடு அருகே எதிரே வந்த மற்றொரு லாரியில் மோதி கவிழ்ந்தது. இதில் லாரியில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

அவர்களைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வரப்படுகிறது. வெள்ளக்கோவில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

SCROLL FOR NEXT