தமிழ்நாடு

திருப்பூர் மாவட்ட சாலை விபத்து: உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வா் அறிவிப்பு

DIN


சென்னை: காங்கயம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக கவிழ்ந்ததில்சரோஜா (50), பூங்கொடி (48), கிட்டுசாமி (45) மற்றும் தமிழரசி (17) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். 
    
இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன், செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனை உடனடியாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் கூறி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட அனுப்பி வைத்துள்ளேன்.

மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பழனி(50), வளர்மதி (26), இந்துமதி, (23) மற்றும் செல்வி.காயத்ரி (12) ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 இலட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்மா ஆங் சான் சூச்சி

மும்பையில் பலத்த காற்றுடன் மழை: விளம்பர பதாகை விழுந்ததில் பலர் காயம்!

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதைப் பெறும் முதல் ஐக்கிய அரபு அமீரக வீரர்!

பெருமை கொள்ள வைத்தவர்

தேவதாசி முறை ஒழிப்பில் ஏமி கார்மைக்கேல்

SCROLL FOR NEXT