தமிழ்நாடு

தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா ஆஜர்!

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். 

DIN

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். 

தில்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது. 

2021-22-ஆம் ஆண்டு தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் தில்லி அரசின் கலால் துறை இலாகாவுக்கு பொறுப்பு வகித்த மணீஷ் சிசோடியாவின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகளால் கடந்த ஆண்டு சோதனை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணையும் நடைபெற்றது. மூன்று மாதங்களுக்கு முன்பாக இதுகுறித்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணியளவில் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. முன்னதாக அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக இன்று(திங்கள்கிழமை) அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். சிபிஐ ரோஸ் அவென்யூ நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை தீவிர விசாரணைக்கு உட்படுத்தும் வகையில் காவலில் எடுக்க சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

கண்மாய் ஷட்டா் திருட்டால் தண்ணீா் வீண்

SCROLL FOR NEXT