தமிழ்நாடு

கிளைமேக்ஸை இப்போதே சொல்லமுடியாது: கமல்ஹாசன்

கிளைமேக்ஸை இப்போதே சொல்லமுடியாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

DIN

கிளைமேக்ஸை இப்போதே சொல்லமுடியாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி அவர் குறித்த புகைப்படங்களின் கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடக்கி வைத்தார்.

சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் புகைப்படக் கண்காட்சியை கமல்ஹாசன் தொடக்கி வைத்தார். ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற பெயரில் முதல்வரின் 70 ஆண்டு பயணம் பற்றி புகைப்படக் கண்காட்சி தொடக்கப்பட்டுள்ளது.

புகைப்படக் கண்காட்சியை தொடக்கி வைத்தப்பின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் திமுகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு, ஓவ்வொரு காட்சியாகத்தான கதையை நகர்த்த வேண்டும். கிளைமேக்ஸை இப்போதே சொல்லமுடியாது என்று தெரிவித்துள்ளார்.

புகைப்படக் கண்காட்சி திறப்பு விழாவுக்கு வருமாறு, கமல்ஹாசனை நேற்று அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்த நிலையில் இன்று புகைப்படக் கண்காட்சியை கமல்ஹாசன் தொடக்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT