சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் மோடி, உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுநீரக பாதிப்பு காரணமாக, சென்னையை அடுத்த அயனம்பாக்கத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, அவர் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, மதுரை, ராமேஸ்வரம் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா வந்திருந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க..இபிஎஃப்ஓ திட்டத்தில் அதிக ஓய்வூதியம்: கேள்வி - பதில்கள்
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐந்து உடன்பிறந்தவர்கள். ஒரு சகோதரி, 4 சகோதரர்கள். இவர்களில் பிரகலாத் மோடி நரேந்திர மோடிக்கு இளையவராவார். இவர் குஜராத் மாநிலம் ஆகமதாபாத்தில் மளிகைக் கடை வைத்திருக்கிறார். மேலும் வாகன டயர்கள் விற்பனை நிலையத்தையும் நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.