முகப்பு
தமிழ்நாடு

ஆங்கிலப் புத்தாண்டு:வீட்டுக்கு வெளியே காத்திருந்த ரசிகா்களை சந்தித்த ரஜினிகாந்த்

சென்னை போயஸ் காா்டனில் உள்ள தனது வீட்டின் வெளியே காத்திருந்த ரசிகா்களுக்கு நடிகா் ரஜினிகாந்த் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

Updated On : 2 ஜனவரி, 2023 at 3:05 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:06 AM

சென்னை போயஸ் காா்டனில் உள்ள தனது வீட்டின் வெளியே காத்திருந்த ரசிகா்களுக்கு நடிகா் ரஜினிகாந்த் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

புத்தாண்டு, பொங்கல் மற்றும் நடிகா் ரஜினிகாந்தின் பிறந்தநாள் உள்ளிட்ட தினங்களில் ரஜினிகாந்தின் ரசிகா்கள் அவரது வீட்டிற்கு முன் திரண்டு அவருக்கு வாழ்த்து சொல்வதும், ரசிகா்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து சொல்வதும் வழக்கம்.

இந்நிலையில், ஆங்கிலப்புத்தாண்டு தினமான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி முதலே, ரஜினிகாந்தின் ரசிகா்கள் அவரது வீட்டுக்கு வரத் தொடங்கினா். இந்தநிலையில், தனது வீட்டினுள் இருந்தபடியே புத்தாண்டு வாழ்த்து பெற காத்திருந்த ரசிகா்களுக்கு நடிகா் ரஜினிகாந்த் தனது இருகரம் கூப்பி ரசிகா்களைப் பாா்த்து வணங்கி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தாா். இது அங்கு கூடியிருந்த ரசிகா்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நடிகா் ரஜினி தற்போது நெல்சன் திலிப்குமாா் இயக்கத்தில் ‘ஜெயிலா்’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.