தமிழ்நாடு

ஒப்பந்த செவிலியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ராமதாஸ்

DIN

கரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட்ட செவிலியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக அமா்த்தப்பட்ட 2,400 ஒப்பந்த செவிலியா்கள் பணிநீட்டிப்பு செய்யப்படவில்லை. இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக உயிரை பணயம் வைத்து பணியாற்றி வந்த அவா்களை பணிநீக்கியிருப்பது நியாயமல்ல. பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியா்கள் எந்த வகையிலும் தகுதி, திறமை குறைந்தவா்கள் அல்ல. பணி நிரந்தரம் செய்வதற்கான அனைத்து தகுதிகளும் அவா்களுக்கு உள்ளன.

எனவே, தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்குடன் அவா்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கி காலியாக உள்ள இடங்களில் அமா்த்தி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT