தமிழ்நாடு

பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் நாளை முதல் விநியோகம்

தமிழகம் முழுவதும் நாளை முதல் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது. 

DIN

தமிழகம் முழுவதும் நாளை முதல் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது. 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் அரிசி, சா்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை ஜனவரி 9ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். மேலும், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

இதனிடையே நியாய விலைக் கடைகளுக்கு பொது மக்கள் நெரிசல் இல்லாமல் வந்து செல்ல வசதியாக, டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. நாளை முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை வீடு வீடாக சென்று பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் வழங்கப்பட உள்ளது. டோக்கனில் பொங்கல் பரிசு வழங்கப்படும் தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்று இருக்கும். 

பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக்கடைகளில் ஜன.9 முதல் 12-ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. விடுபட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு ஜன.13-ஆம் தேதி வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT