மூத்த புகைப்படக் கலைஞர் கே.வி.சீனிவாசன் 
தமிழ்நாடு

வைகுண்ட ஏகாதசி விழாவின்போது மூத்த புகைப்படக்காரர் உயிரிழப்பு

சென்னை பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வை புகைப்படம் எடுக்கச் சென்ற மூத்த புகைப்படக் கலைஞர் சீனிவாசன் நெஞ்சு வலி ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

சென்னை பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வை புகைப்படம் எடுக்கச் சென்ற மூத்த புகைப்படக் கலைஞர் சீனிவாசன் நெஞ்சு வலி ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தி இந்து நாளிதழில்(ஆங்கிலம்) மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றுபவர் கே.வி. என்றழைக்கப்படும் கே.வி.சீனிவாசன்(வயது 56).

சென்னை பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வை புகைப்படம் எடுக்கும் பணியில் இன்று காலை 4.30 மணியளவில் ஈடுபட்டிருந்தார். அப்போது சீனிவாசனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில், கோயில் வளாகத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர் ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனங்களில் பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT