கோப்புப்படம் 
தமிழ்நாடு

மெரினா - பெசன்ட் நகர் இடையே ரோப் கார் அமைக்க ஆய்வு!

சென்னை மெரினா - பெசன்ட் நகர் இடையே ரோப் கார் சேவை அமைக்க சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய அரசு ஆய்வு நடத்தி வருகிறது.

DIN

சென்னை மெரினா - பெசன்ட் நகர் இடையே ரோப் கார் சேவை அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் 6 மாநிலங்களில் 10 இடங்களில் ரோப் கார் சேவை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதிகபட்சமாக மகாரஷ்டிராவில் 5 கி.மீ. வரையும், இரண்டாவதாக தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரையிலிருந்து பெசன்ட் நகர் எலியட் கடற்கரை வரை 4.6 கி.மீ. தொலைவுக்கு ரோப் கார் சேவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ரோப்கார் சேவைக்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஆய்வு நடத்த தொடங்கியுள்ளது.

புவிசார் தொழில்நுட்பம் உள்ளடக்கிய பல்வேறு பொறியியல் ஆய்வுகளும், சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பாக ஆய்வுகளும் மேற்கொண்டு ரோப் கார் சேவை அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT