வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி. தம் மக்களுக்கு நீதி கிடைக்க அவர் முன் நின்று போராடினார். காலனியாதிக்கத்தை தீவிரமாக எதிர்த்ததுடன், சமூக நன்மைக்காகவும் பணியாற்றினார். அவரது தீரம் தலைமுறை தாண்டியும் உத்வேகம் அளிக்கும்' என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.
வீரமங்கை வேலு நாச்சியார் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடிய முதல் வீரப் பெண்மணி. 'கொரில்லா' போர்முறையை முதன்முதலாக சோதித்துப் பார்த்தவர். தென்னிந்தியாவின் ஜான்சிராணி என்று அழைக்கப்படுபவர். 18-ஆம் நூற்றாண்டில் சிவகங்கையை ஆண்ட மகாராணி. இவரது பிறந்தநாள் இன்று (ஜனவரி 3).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.