தமிழ்நாடு

தாம்பரம் - தின்சுகியா(அசாம்) இடையே சிறப்பு ரயில்: முன்பதிவு தொடங்கியது!

தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புது தின்சுகியா ரயில் நிலையம் வரை செல்லும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

DIN

தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புது தின்சுகியா ரயில் நிலையம் வரை செல்லும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்திலும், மகரசங்கராந்தி பண்டிகையையொட்டி நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்திலிருந்து வட மாநிலங்களுக்கு மகரசங்ராந்தி பண்டிகைக்கு செல்லும் வட மாநில மக்களுக்கு வசதியாக சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து அசாம் மாநிலம் புது தின்சுகியா ரயில் நிலையம் வரை ஜனவரி 8ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. தாம்பரத்திலிருந்து ஜன 8 காலை 10.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தின்சுகியாவுக்கு ஜன.10 இரவு 7.35 மணிக்கு சென்றடையும்.

அதேபோல், புது தின்சுகியாவில் இருந்து ஜன. 11 இரவு 8.20 மணிக்கு கிளம்பும் ரயில் ஜன. 14 காலை 5.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று அதிகாலை முதல் தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுங்குவாா்சத்திரத்தில் ரூ.96 லட்சத்தில் பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல்!

மொபெட் மீது காா் மோதல்: ஆசிரியா் தம்பதி உயிரிழப்பு

தீயணைப்பு பணியின் போது சிலிண்டா் வெடித்து விபத்து: 13 போ் காயம்

வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!

மகளிருக்கு ரூ.5,000 வழங்க அதிமுகவின் அழுத்தமே காரணம்: எடப்பாடி கே.பழனிசாமி

SCROLL FOR NEXT