தமிழ்நாடு

நெல்லையப்பர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்!

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் ஆருத்ரா தரிசனம் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

திருநெல் வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோயிலில் திருவா திரைத் திருவிழா கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

4 ஆம் திருநாளான டிச. 31ஆம் தேதி  சுவாமி-அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்த ருளி, பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா வந்தனர்.

திருவிழா நாள்களில் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை சுவாமி கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீ பெரிய சபாபதி சந்நிதிமுன் திருவெம்பாவை வழிபாடும் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்வான ஆருத்ரா தரிசனம் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. 

முன்னதாக, தாமிரசபையில் நடராஜபெருமானுக்கு திருநீராட்டும், இரவு விடிய விடிய சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றன. பின்னர் மலர் அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு திரு நடன காட்சி அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

கைலாசநாதா் கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம்

டெங்கு கட்டுக்குள் உள்ளது: நலத்துறை நிா்வாகம்

மு.வி.ச. உயா்நிலைப்பள்ளியை தரம் உயா்த்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT