சிதம்பரம் நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா மகாபிஷேகம் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
ஸ்ரீநடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன உத்சவம் கடந்த டிச.28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜன.5-ம் தேதி வியாழக்கிழமை தேர்த்திருவிழா நடைபெற்றது. பின்னர் இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீமந் நடராஜ மூர்த்திக்கும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது.
ஜன.6ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் ஶ்ரீநடராஜ மூர்த்திக்கும், ஶ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது. பால், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்டவை குடகுடமாக அபிஷேகம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அபிஷேகத்தைக் கண்டு தரிசித்தனர்.
உத்சவ ஏற்பாடுகளை பொது தீட்சிதர்களின் செயலாளர் சிஎஸ்எஸ்.ஹேமசபேச தீட்சிதர், துணைச்செயலாளர் கே.சேதுஅப்பாசெல்ல தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் சு.ரா.நடராஜ குஞ்சிதபாத தீட்சிதர் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.