தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 அதிரடியாக குறைந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ஒரு சவரன் ரூ.41,520ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ஒரு சவரன் ரூ.41,520ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டு வருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த சில வாரங்களாக  தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது.

டிச.31ஆம் தேதி ஒரு சவரன் ரூ.41,040 ஆக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. பிறகு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், 2023 -ம் ஆண்டுக்கான வர்த்தகம் தொடங்கிய முதல் நாளில் இருந்து ஏற்றம் கண்டுவரும் நிலையில் இன்று(ஜன.6)ஆம் தேதியான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,190 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.304 குறைந்து ஒரு சவரன் ரூ.41,520 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.50 காசுகள் குறைந்து ரூ.73.50 ஆகவும், ஒரு கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.73,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT