தமிழ்நாடு

கரோனா காலத்தில் பணிபுரியவே பணி ஆணை: பேச்சுவார்த்தைக்குப் பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

கரோனா காலத்தில் பணிபுரியவே செவிலியர்களுக்கு தற்காலிக பணி ஆணை வழங்கப்பட்டது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

DIN

கரோனா காலத்தில் பணிபுரியவே செவிலியர்களுக்கு தற்காலிக பணி ஆணை வழங்கப்பட்டது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

கடந்த 2 ஆண்டுகளில் கரோனா தொற்று அதிகரித்ததையடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு தமிழகத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தற்காலிக முறையில் ஒப்பந்த செவிலியா்களாக நியமிக்கப்பட்டனா்.  ஒப்பந்த காலத்துக்குப் பிறகு அவா்களில் 3,000 பேருக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டது. மீதமுள்ள 3,000 பேருக்கு பணிக்கால ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் பணி நீட்டிப்பு இல்லை என தமிழக அரசு கடந்த வாரம் ஆணை வெளியிட்டது. 

இதற்கு ஒப்பந்த செவிலியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து மருத்துவத்துறை அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து, செவிலியர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கரோனா காலத்தில் பணிபுரியவே செவிலியர்களுக்கு தற்காலிக பணி ஆணை வழங்கப்பட்டது. பணி நீட்டிப்பு வழங்க முடியாது என செவிலியர்களிடம் அதிகாரிகள் எடுத்துரைத்துள்ளனர். காலி பணியிடங்கள் இருப்பின் விண்ணப்பிக்குமாறு செவிலியர்களிடம் தெரிவித்துள்ளோம். டிஎம்எஸ் காலி பணியிடங்கள் எம்ஆர்பி-யில் வரும்போது முன்னிரிமை தருவதாக தெரிவித்துள்ளோம் என்றார். 

இதனிடையே அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் தொடரும் என செவிலியர்கள் அறிவித்துள்ளனர். செவிலியர் பிரதிநிதிகளுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT