தமிழ்நாடு

சொத்து குவிப்பு வழக்கு: ஆ.ராசா நீதிமன்றத்தில் ஆஜர்

DIN

சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணைக்காக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் திமுக எம்பி ஆ.ராசா செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகியுள்ளார்.

வருமானத்திற்கு அதிகமாக ரூ. 5.53 கோடி சொத்துகள் சேர்த்ததாக 2015-ல் ஆ.ராசா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆ.ராசா உள்பட நான்கு பேர் நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று காலை ஆ.ராசா ஆஜரானார்.

இந்த வழக்கில், ஆ.ராசா தரப்பிற்கு குற்றப்பத்திரிகை நகல் அளிக்கப்பட்டு வழக்கின் விசாரணையை பிப்ரவரி 8ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’முஸ்லிம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

வேட்பாளர்களும் வழக்குகளும்!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

SCROLL FOR NEXT