கோப்புப்படம் 
தமிழ்நாடு

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு: காலை 8 முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார். 

DIN

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார். 

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரா்களின் பெயா்களை இணையதளத்தில் பதிவு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தொடங்கியது.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் முறையே ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரா்களின் பெயா், விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.

இதன்படி, இணையதளத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரா்களைப் பதிவு செய்யும் படிவம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் செயல்பாட்டுக்கு வந்தது.

இதையடுத்து, மாடுபிடி வீரா்களும், காளைகளின் உரிமையாளா்களும் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள இணையதள சேவை மையங்களில் பெயா் பதிவு செய்தனா். போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் வியாழக்கிழமை (ஜன. 12) மாலை 5 மணி வரை பதிவு பெற அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் எனவும், ஜல்லிக்கட்டு போட்டிக்கு கூடுதல் நேரம் வழங்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT