தமிழ்நாடு

ஆளுநருடன் வந்தவர் பேரவை உரிமை மீறல்: அறிக்கை அளிக்க உத்தரவு

ஆளுநருடன் வந்த விருந்தினர் சட்டப்பேரவை உரிமை மீறலில் ஈடுபட்டதாக திமுக எழுப்பியுள்ள புகார் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.

DIN

ஆளுநருடன் வந்த விருந்தினர் சட்டப்பேரவை உரிமை மீறலில் ஈடுபட்டதாக திமுக எழுப்பியுள்ள புகார் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.

புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் ஜனவரி 9ஆம் தேதி திங்கள்கிழமை அன்று தொடங்கியது. அப்போது ஆளுநருடன் வந்த விருந்தினர் பேரவை நடவடிக்கைகளை செல்போனில் பதிவு செய்ததாக உரிமை மீறல் பிரச்னையை புதன்கிழமை திமுக எழுப்பியுள்ளது.

இதுகுறித்து திமுக எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா பேசுகையில், ஆளுநருடன் வந்த விருந்தினர் சட்டப்பேரவை நடவடிக்கைகளை அவரது செல்போனில் பதிவு செய்தார். இது பேரவை விதிகளின்படி தவறாகும். உடனடியாக அவைக் காவலரிடம் கூறி நடவடிக்கை எடுக்க கூறியிருந்தேன் எனத் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, உரிமை மீறல் இருப்பதாக கருதுவதால் ஆராய்ந்து அறிக்கை அளிக்க உரிமை மீறல் குழுவுக்கு உத்தரவிடுவதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT