சேது சமுத்திரத் திட்டம் தேவை: பேரவையில் முதல்வர் தீர்மானம் 
தமிழ்நாடு

சேது சமுத்திரத் திட்டம் தேவை: பேரவையில் முதல்வர் தீர்மானம்

பாதியில் நிறுத்தப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு பேரவையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார்.

DIN

சென்னை: பாதியில் நிறுத்தப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு பேரவையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு மத்திய அரசுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கும். 

ரூ.2,427 கோடியில் தொடக்கப்பட்ட திட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால்  அதன் பயன்கள் கிடைக்கவில்லை. சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் துறைமுகங்களும் வளர்ச்சியடையும். சேது சமுத்திரத் திட்டத்தை இனியும் நிறைவேற்றவில்லையெனில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்த வாஜ்பாயி சாத்தியக் கூறு ஆய்வுகளுக்கு அனுமதி அளித்தார். ஆனால், அரசியல் காரணங்களுக்காக பாஜக இந்த திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டது.

ராமேஸ்வரம் கடல் பகுதியில் இருப்பது எந்த மாதிரியான கட்டுமானம் என்பதை கூறுவது கடினம் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார் என்றும் ஸ்டாலின் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT